Daksh

Search
Close this search box.

சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் கடுமையான மாற்றங்களை கொண்டு வந்தாலும் டிஜிட்டல் சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் மட்டுமே மற்ற தீர்ப்பாயங்களுக்கும் முன்மாதிரியாக இருக்க முடியும்

சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயமானது சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கட்டுப்பாட்டிற்கு வெளியே இயங்கிக்கொண்டு வரி செலுத்துவோரின் உரிமைகளையும் அரசாங்கத்தின் வருவாய் நலன்களையும் பாதுகாக்க வேண்டும்.

சூர்ய பிரகாஷ் பி.எஸ், ஹரிஷ் நரசப்பா, 28 அக்டோபர், 2021 காலை 08:30 IST

எந்த வித காலதாமதமுமின்றி உடனடியாக  சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை  (GSTAT) அமைக்குமாறு சமீபத்தில் உச்ச நீதிமன்றம் நரேந்திர மோடி தலைமயிலான அரசையும், சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் கவுன்சிலையும் கேட்டுக் கொண்டது. சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் அமலுக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகியும், சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் மேல்முறையீட்டு தீர்ப்பாயம்  இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. அது இல்லாத நிலையில், வரி செலுத்துவோர் உயர் நீதிமன்றங்களில் விதிமுறை ஆவணங்களை பயன்படுத்த வேண்டியிருந்தது. இது வரி செலுத்தும்  விதிமுறைகளை பாதிக்கும் நோக்கில் இருந்தது.

ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும்  இடையேயான சிக்கல்கள்

சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் அமலுக்கு வந்த உடன்  சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் அறிவிக்கப்பட்டன , ஆனால் செப்டம்பர் 2019 இல் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தடையின் காரணமாக அவற்றை செயல்படுத்த முடியாமல் ஆகிவிட்டது. சர்ச்சையின் முக்கிய அம்சமாக இருந்தது, சரக்கு மற்றும் சேவை வரி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களின்  அமர்வின் அமைப்பு ஆகும். சரக்கு மற்றும் சேவை வரி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களின் ஒவ்வொரு அமர்விலும் 3 உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்று முன்மொழியப்பட்டது – அந்த உறுப்பினர்கள் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் இரண்டு பிரதிநிதிகளாக இருக்க வேண்டும் என்றும் , சட்டம் அல்லது நீதித்துறை சேவையில் அனுபவம்  கொண்ட ஒருவராக இருக்கவேண்டும் என்றிருந்தது.

இந்தப் பிரச்சினையில் உருவான சட்டத்தின்படி, நீதிமன்றங்களின் அதிகார வரம்பை இப்போது தீர்ப்பாயங்கள் மாற்றியமைக்கும் சூழ்நிலையில், நிர்வாகப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் எண்ணிக்கை, நீதித்துறை சேவையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கக் கூடாது என்று அமர்வின் அமைப்பு இருக்க வேண்டும். பெரும்பாலான சூழலில் நீதிமன்றங்கள் அரசாங்கத் துறைகளுக்கு எதிரான பிரச்சனைகளை  தீர்ப்பதால், இது பிரச்சனை தீர்க்கும் அமைப்பின் சுதந்திரத்தை உறுதி செய்வதாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகள் இந்த சிக்கலுக்கு தீர்வு காணவில்லை. இந்த விஷயத்தில் வழக்கின் கீழ் உள்ள மற்றொரு கேள்வி, வழக்குரைஞர்களை நீதித்துறை உறுப்பினர்களாகக் கருதுவதிலிருந்து விலக்க முடியுமா என்பதுதான்.

ஒரு வளர்ச்சிக்கான வாய்ப்பு

ஒன்றிய மற்றும் மாநில அரசுகள்  இந்தச் சிக்கலை எவ்வாறு தீர்க்கின்றன என்பதை தாண்டி , இந்தியாவில் உள்ள பிற நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களுக்கான தரநிலையை டிஜிட்டல் முறையில் அமைத்து, எதிர்கால சிக்கல்களுக்கு ஒரு தீர்வு மன்றத்தை உருவாக்க சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் காரணமாக இருப்பதால்,அதனை ஒரு வளர்ச்சிக்கான  வாய்ப்பாக பார்க்க வேண்டும் .

புதிய சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயமானது, சரக்கு மற்றும் சேவை வரி வலையமைப்பில் உருவாக்கப்பட வேண்டும். இது ஒரு நேரடி, வலுவான ஆன்லைன் தளமாகும். இது ஏற்கனவே பெரிய அளவிலான தரவுகளை செயல்படுத்திக்கொண்டிருக்கிறது . இப்போதைய சூழலில் , சுமார் 74 கோடி வரிக் கணக்குகளைப் பதிவேற்றிய 1.3 கோடி பதிவுசெய்யப்பட்ட வரி செலுத்துவோரின் தரவுகளை அந்த தளம்  நிர்வகிக்கிறது . சரக்கு மற்றும் சேவை வரி வலையமைப்பானது  ஏற்கனவே பின்தளத்தில் வரி செலுத்துவோர் தொடர்புகளுக்கு தேவையான  பணிப்பாய்வுகளைக் கொண்டிருந்தது. சிக்கல்கள் தீர்வு மன்றத்தில் டிஜிட்டல் பாதையை முழுமையாக ஆன்லைனில் தொடர சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை இணையத்தில் இயங்க அனுமதிப்பது முக்கியம்.

சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் என்பது சரக்கு மற்றும் சேவை வரி அதிகாரிகளின் கட்டுப்பாட்டிற்கு வெளியே இருக்கும் குடிமக்கள் மற்றும் வரி செலுத்துவோருக்கு கிடைக்கும் முதல் தகராறு தீர்வு மன்றமாகும். வரி செலுத்துவோரின் உரிமைகள் மற்றும் யூனியன் மற்றும் மாநிலங்களின் வருவாய் நலன்கள் இரண்டையும் பாதுகாக்க, அடுத்த தலைமுறை தொழில்நுட்ப தளத்தில் செயல்படும் வலுவான, விதி அடிப்படையிலான தீர்ப்பாயம் இன்றியமையாதது. சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் இணக்கம் மற்றும் நிர்வாகத்திற்கு தொழில்நுட்பம் எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய தீர்ப்பாயம் தற்போதுள்ள பணிப்பாய்வுகளின் இயல்பான நீட்சியாக இருக்கும்.

சரக்கு மற்றும் சேவை வரி சட்டம்  கொண்டுவரப்பட்ட காலகட்டம் எவ்வளவு கடுமையான மாற்றத்தை கொண்டு வந்துள்ளது என்றும் அவை கடுமையாக பின்பற்றப்படுகின்றன என்பதை  உறுதி செய்வதில் கவனம் செலுத்தும் முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதால், வரும் ஆண்டுகளில் அதிக வழக்குகள் வரும் சூழல் உருவாகிறது. வழக்குகள் குவியத் தொடங்கும் முன்னரே, அத்தகைய தீர்ப்பாயத்தைத் திட்டமிட்டு உருவாக்குவதற்கான நேரம் இது. மற்ற நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களின் பாதையில் செல்லாமல் அவற்றின் வளர்ச்சியிலிருந்து கற்றுக்கொள்வது மிக முக்கியம். 

தீர்ப்பாயங்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் நீதிமன்றங்கள்

சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம்  முற்றிலும் இணைய வழியில், டிஜிட்டல் முறையில் , அடுத்த தலைமுறை தீர்ப்பாயமாக அமைக்கப்பட வேண்டும். தேவையான தரவு சார்ந்த சரிபார்ப்புகளுக்கு பிறகு சரக்கு மற்றும் சேவை வரி வலையமைப்பானது இதிலிருந்து பதிவுகளைப் பெறும். மேல்முறையீடு செய்ய விரும்புவோர் எவரும், வரி செலுத்துவோர் அல்லது திணைக்களம், மேல்முறையீட்டு குறிப்பாணையை டிஜிட்டல் முறையில் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் வலையமைப்பின்  பதிவுகளில் உள்ள ஆவணங்களின் குறிப்புகளுடன் பதிவுகள் தானாகவே சரக்கு மற்றும் சேவை வரி சட்ட தீர்பாணையத்திற்கு மாற்றப்படும். அதற்கு பதிலளிக்கும் தரப்பு மேல்முறையீட்டுக்கு மட்டுமே ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய வேண்டும்.

சரக்கு மற்றும் சேவை வரி வலையமைப்பின் உள்நுழைவு சான்றுகளை  சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் பயன்படுத்தப்படலாம். அவை தாக்கல் செய்யப்பட்ட உடனேயே அறிவிப்புகள் மற்றும் ஆவணங்களைப் பெற அனுமதிக்கின்றன. இத்தகைய எளிய வழிமுறைகள் பின்பற்றுவதால் ஒரு வழக்கில் செலவிடப்படும் நேரம் குறைந்து, வழக்கு சார்ந்த செயல்முறைகளை வலுவாக்கும். சரக்கு மற்றும் சேவை வரி சட்ட தீர்ப்பாய நீதிபதிகள், துறை மற்றும் வரி செலுத்துவோருக்கான டாஷ்போர்டுகளுடன் வலுவான, விதி அடிப்படையிலான வழக்கு மேலாண்மை அமைப்பைக் கொண்டிருக்கும். அத்தகைய தளத்தை மற்ற தீர்ப்பாயங்கள் ஒரு மாதிரியாகப் பயன்படுத்தலாம்.

வரி செலுத்துவோருக்கு, டிஜிட்டல் சரக்கு மற்றும் சேவை வரி சட்ட தீர்ப்பாயங்களுக்கு மாறுவதன் மூலம், பதிவுகள் மற்றும் ஆதாரங்களை தயாரிப்பதில் உள்ள சுமைகளை குறைக்கலாம். தெளிவான விதிகளின்  அடிப்படையிலான செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மையை வழங்கும். ஒரு  நிறுவனத்தில் அவை நம்பிக்கையை வளர்க்கும். எதிர்பாராத சில நிகழ்வுகள் மற்றும் வழக்குகளின் சுழற்சி ஆகியவை செலவு மற்றும் கஷ்டங்களைக் குறைக்கும். வரி நிர்வாகக் கண்ணோட்டத்தில், துறை வழக்கறிஞர்கள் அனைத்துப் பதிவுகளையும் சுமூகமாக அணுக முடியும் . கால தாமதமின்றி அவர்களின்  வழக்குகளை முன்வைக்க முடியும். தரவுகளுடன்  கூடிய வரிவிதிப்புக் கொள்கை மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை செயல்படுத்தும் சிக்கல்களின் தன்மை, அளவு மற்றும் பொருள் ஆகியவற்றை வரி நிர்வாகிகள் விரைவாகப் பார்க்கலாம். சிறந்த வரி இணக்கம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி சட்ட தீர்பாயங்கள் வளர்க்கும் நியாயமான வரி நிர்வாகம் இருந்தால்  நீண்ட கால சமூக-பொருளாதார பலன்களை நம்மால் ஈட்ட முடியும்.

தொழில்நுட்பத்தைத் தாண்டி தொலைநோக்கு திட்டங்களுக்கு  திறமையும் அவசியம் 

இப்படிப்பட்ட  நிறுவனத்தை உருவாக்க தொழில்நுட்பத்தால் மட்டும்  முடியாது. இந்த புதிய நிறுவனத்தை நடத்தும் நபர்கள் அவர்களின் தொலைநோக்கு பார்வையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.மாற்றங்களை கையாள உறுதியுடன் இருக்க வேண்டும். மற்ற நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களுக்கு பொதுவானதாக இருக்கும் திறமைக் குழுவில் இருந்து இந்த அணி உருவாக்கப்படும். தேவைக்கேற்ப  மறுவடிவமைக்கப்பட்ட செயல்முறைகளை உருவாக்குவதும், சோதனைகளுக்கு பிறகு தோல்வியுற்ற முறைகளின் மூலம் பல புதிய யுத்திகளை கற்று தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவதும் அவசியம். மிக முக்கியமாக, அனைத்து பங்குதாரர்களும் ஒரு பொதுவான பார்வையைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், காலத்திற்கேற்ப மாற்றியமைத்து கொண்டு பணியாற்ற வேண்டும்.

பல ஆண்டுகளாக திருத்தம் செய்யும் முயற்சியை விட்டுவிட்டு, முதல் முயற்சியிலேயே ஒரு புத்தம் புதிய சிக்கல்  தீர்வு மன்றத்தை உருவாக்க இது ஒரு வாய்ப்பாக இருக்கிறது. இதை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு சரக்கு மற்றும் சேவை வரி சட்ட சபைக்கு உள்ளது. இனியும் கால தாமதம் செய்யாமல், வளர்ச்சிக்கான வாய்ப்புகளை தவறவிடாமல்  அவர்கள் செயல்படவேண்டும் .

ஹரிஷ் நரசப்பா  Samvad Partners மற்றும் இணை நிறுவனர், DAKSH உடன் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.

சூர்ய பிரகாஷ் பி.எஸ், நிர்வாக மற்றும் பொறுப்புக்கூறலில் பணியாற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனமான DAKSH இல் திட்ட இயக்குநராக உள்ளார்.

எழுத்தாளர்களின் பார்வைகள் தனிப்பட்டவை.

(பதிப்பாசிரியர்-ஹம்ரா லயீக்)

SHARE

RECENT ARTICLES

© 2021 DAKSH India. All rights reserved

Powered by Oy Media Solutions

Designed by GGWP Design